இந்தியாவில் அரிசி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக இருந்து வரும் நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை பெரும் பாதித்துள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள நிலையில் இதன் விலை உயர்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிசியின் வருடாந்திர பண வீக்க விகிதம் 12 சதவீதம் உள்ளது.

இந்த நிலையில் அரிசியின் விற்பனை விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திய நிலையில் அரிசியின் சில்லறை விற்பனை விலையை உடனே அரிசி தொழிற்சங்கங்கள் குறைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அரிசியின் விலையை குறைத்து மக்கள் வாங்க ஏதுவான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது