
பிரபல பாடகி பாலக் முச்சால் மத்திய பிரதேசத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் சிகிச்சை செலவு ஏற்று இதுவரை சுமார் 3000 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் . இது குறித்து இவர் கூறுகையில், என்னுடைய இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறேன்.
இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கிறது. தற்போது இதுதான் என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியம் என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.