டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ஒன் பிரதான தேர்வு முடிவுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம், ஒருங்கிணைந்த குரூப்-3 தேர்வு முடிவுகள், குரூப் 7 மற்றும் குரூப் 8 தேர்வு முடிவுகள் மற்றும் வன பயிற்றுநர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.