
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று TNPSC குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் குறித்த தகவலலானது தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி,தேர்வு தாள்கள் திருத்தும் பணியானது இந்த மாதம் தொடங்கும் எனவும், ஆனால் திருத்தம் முடிவதற்கு 6 மாத காலம் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே முடிவுகள் வர பிப்ரவரிக்கு பின் ஆகலாம் என்று கூறப்படுகிறது.