தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் எஸ்.பி.ஐ வங்கி கமிஷனாக ₹10.68 கோடியை பெற்றுள்ளதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு முன்னர் 2018 முதல் 2024 வரை 30 முறை தேர்தல் பத்திரங்களை விற்கவும், அதனை ரொக்கமாக மாற்றவும் வங்கி கட்டணம், பரிவர்த்தனை கட்டணத்துடன் அதற்கான 18% ஜி.எஸ்.டியுடன், மத்திய நிதியமைச்சகத்திடம் எஸ்.பி.ஐ வசூலித்துள்ளது.