
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதையுமே சரியாக செய்யவில்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரையில் மக்களுக்கு பணியாற்றும் இயக்கம். அதைத்தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக நாங்கள் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம். சென்னையில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை.
ஏனெனில் அவர்களை நம்பி தான் மக்கள் வாக்களித்துள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்காக வீணாக செலவு செய்கிறார்கள். அவசர தேவைக்கு எதையும் செய்வதில்லை. 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை பலப்படுத்த நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. தற்போது அதிமுக சரியாக இல்லை. அதை சரி செய்ய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொடுத்த மக்களாட்சியை மலர செய்ய வேண்டும். மேலும் அதற்காக என்னுடைய பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.