சென்னை அருகே செம்பாக்கம் திருவிக நகர் பகுதியில் லியாஸ் தமிழரசன் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 22 வயது இளம்பெண்ணுடன் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய வீட்டிற்கும் அவர் அழைத்து சென்று தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த பெண்ணை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். அதனை அவர் தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதேபோன்று அந்த பெண்ணை அவர் பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பணம் மற்றும் 20 சவரன் தங்க நகைகள் போன்றவற்றையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் திடீரென தமிழரசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துள்ளார். அப்போது அவர் பல பெண்களுடன் பழகி வந்தது தெரிய வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகை போன்றவைகளை பறித்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் தமிழரசனை கைது செய்த நிலையில் அவருடைய செல்ஃபோனில் இருந்து பல ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக ஐடி விங் அண்ணாமலை தமிழரசனுடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு பாஜக நிர்வாகி செய்த அவல செயலுக்கு அண்ணாமலை எத்தனை முறை சாட்டையால் தன்னை அடித்துக் கொள்ளப் போகிறார். மேலும் அதற்கான இடத்தையும் நேரத்தையும் அவர் குறித்து விட்டாரா என்று பதிவிட்டுள்ளனர்.