
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டங்ஸ்டன் பிரச்சனைக்கு முதன் முதலில் நான்தான் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தேன். அங்குள்ள விவசாயிகள் இன்று பல அரசியல் தலைவர்களையும் நேரில் சென்று பார்த்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். ஆனால் என்னை தற்போது வரை யாரும் வந்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தம். டங்ஸ்டன் பிரச்சனைக்கு மட்டும் மத்திய அரசு அமைச்சர்களை அண்ணாமலை அழைத்து வருகின்றார்.
என்எல்சி மற்றும் பரந்தூர் உள்ளிட்ட மக்கள் போராட்டம் நடத்தக்கூடிய இடத்தை அண்ணாமலை இதுவரை எட்டிக் கூட பார்க்கவில்லை. தேசியம் பேசக்கூடிய அண்ணாமலை அரசியல் பேசுவதற்கு மட்டும் ஒரு சில இடத்திற்கு செல்வதும் அந்த கருத்துக்களை மட்டும் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அண்ணாமலை இடம் ஏன் இவ்வாறு பாரபட்சம் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலை பெற்று தர வேண்டும் என்று வேல்முருகன் பேசி உள்ளார்.