தேங்காய் என்றாலே பலருக்கும் பிடிக்கும் என்றாலும், அதை ஓட்டிலிருந்து தனியாகப் பிரித்தெடுப்பது மிகவும் கடினமான வேலையாகும். அதைப் பிரித்தெடுப்பதற்குள் கைகளுக்கு வலி எடுத்துவிடும். ஆனால், இந்தச் சிரமத்தைக் கையாள்வதற்காக, ஓர் இன்ஸ்டாகிராம் இளைஞர் மிகவும் சுலபமான டிப்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த டிப்ஸின் படி, தேங்காயை உடைத்த பிறகு, அந்தத் தேங்காய்த் துண்டுகளை வெந்நீரில் (Hot Water) போட்டு நன்கு சூடுபடுத்த வேண்டும். சூடான பிறகு அதை வெளியே எடுத்து, தலைகீழாகக் கவிழ்த்து வைக்க வேண்டும்.
பிறகு, தேங்காயின் மீது ஏதேனும் கனமான பொருள் ஒன்றை வைத்து லேசாகத் தட்டினால் போதும். சூடுபடுத்தப்பட்ட தேங்காய் ஓட்டிலிருந்து அப்படியே சிறிய கீறல் கூட இல்லாமல் முழுவதுமாகப் பிரிந்து நமது கைக்கு வந்து சேரும். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இவ்வளவு சுலபமான ஒரு விஷயத்தை நாம் இத்தனை நாள் தவறவிட்டோமே, இனி இதைச் செய்து பார்க்கிறோம்!” என்று ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த எளிய வழிமுறை, தேங்காய் உடைக்கும் வேலையைச் சுலபமாக்கும் ஒரு ட்ரெண்டிங் டிப்ஸாக மாறியுள்ளது.
View this post on Instagram
