தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. 58 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மீதமுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். அதேசமயம் இடங்கள் தொடர்பாக இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.