நாகை மற்றும் இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டது. சிறிய பாணி என்ற நாகை மற்றும் இலங்கை இடையேயான கடல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14ஆம் தேதி அதாவது நேற்று முதல்தொடங்கப்பட்டது. அதனால் நேற்று மட்டும் 2803 என்ற பயண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கப்பலில் பயணம் செய்ய 7,670 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் நாளில் மட்டும் சலுகை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாகை மற்றும் இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கிய செயல்பட்டு வரும் நிலையில் 7,670 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட இந்த கப்பலில் நேற்று 50 பேர் பயணம் செய்திருந்தனர். இரண்டாவது நாளான இன்று ஏழு பேர் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ததன் காரணமாக இன்று கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண தள்ளுபடி அறிவித்தும்  இரண்டாவது நாளே ரத்து செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.