
தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது போன்ற வெள்ளை சூழலை இதுவரை கண்டிராத மாவட்டம் மக்கள் தற்போது அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அதில் நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 190 நடமாட மருத்துவ வாகனங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. இதனை சரி செய்ய ஒரு மாத காலமாகும். அதுவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய்களுக்கான சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.