தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் மற்றும் பாலர்ஷா இடையே தண்டபால பராமரிப்பு பணி நடைபெறுவதால் தென்னிந்தியாவிலிருந்து செல்லும் 24 வாராந்திர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை மற்றும் நிஜாமுதீன் கொங்கு விரைவு ரயில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 7 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கமாக ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருநெல்வேலி மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 7 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கமாக ஜனவரி 2 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றது. கேரளாவின் கொச்சுவேலி மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரில் இருந்தும் உத்திர பிரதேசம், பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் ஹம்சா பார் மற்றும் ராப்திசாகர் உள்ளிட்ட 22 விரைவு ரயில்கள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.