நாட்டின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கியது. சென்னை, நெல்லை, சென்னை, விஜயவாடா உள்ளிட்ட 9 ரயில் சேவைகளை நாளை  பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், சென்னை – நெல்லை இடையேயான ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இந்த ரயில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள நிலையில் இந்த வந்தே பாரத் ரயிலின் பயணச் சீட்டு கட்டண விவரங்களின் படி, சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1620 என்றும், ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.