தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் லாரி – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல் ஆர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மனவேதனையடைந்தேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.