
நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள கோனி தீவு-ஸ்டில்வெல் அவென்யூ சுரங்கப்பாதை நிலையத்தில் எஃப் ரயிலில் இருந்தபோது ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீ விபத்து பற்றிய புகாரைப் பெற்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அங்கு செயலற்ற ரயிலில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் இருந்துள்ளார்.
அவரை காப்பாற்ற முயற்சித்த போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்தவரை தீ வைத்து எரித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.