மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் ஜாப்ராபாத் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பசோடி சந்தோலில் பகுதியில் ஒரு பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இங்கு தொழிலாளர்கள் தங்குவதற்காக தற்காலிகமாக ஒரு கொட்டகை அமைக்கப்பட்ட நிலையில் அதில் இன்று அதிகாலை சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அங்கு வந்த நிலையில் தொழிலாளர்கள் துவங்குவது தெரியாமல் அந்த இடத்தில் அவர் மணலை கொட்டியுள்ளார்.
இந்த விபத்தில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர்.
