துலாம் ராசி அன்பர்களே,

இன்று எப்படிப்பட்ட காரியத்தையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். முயற்சிக்கான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். சமூக அந்தஸ்து உயரும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று பெண்களுக்கு முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சினை சரியாகும். யோகமான நல்ல பலன் ஏற்படும்.

இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு கல்வியில் ஜெயிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். தேர்விலும் வெற்றி காண முடியும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஐந்து ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்