துலாம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்மறையாக பேசுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. கவலைகளை மறந்து செயல்படுவீர்கள். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து எந்த முடிவையும் எடுங்கள். இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கிறது. இனிய கனவுகள் மேம்படும். காரியங்களில் வெற்றி ஏற்படும். மனப்பதட்டம் இல்லாமல் இருப்பது நல்லது.

வாய்ப்புகள் வீடு தேடி வரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். திடீர் பணவரவு கிடைக்கும் இன்று பெண்களுக்கு வீடு மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். திறமைகள் வெளிப்படும். யோசித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். எதார்த்தமாக செயல்படுவீர்கள். பெற்றோர் சொல் கேட்டு நடக்க பாருங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்