அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில், இபிஎஸ்-க்கு தங்களது முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட ஆதரவு கையெழுத்துக்கள் அவரிடம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டனர்” என ஆவேசமாக சாடினார். துரோகங்களை முறியடித்து கட்சி வலுவாக செயல்படும் என்பதை காட்டும் வகையில் இந்த கையெழுத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது உட்கட்சி அரசியலில் இபிஎஸ்-ன் பிடியை மேலும் பலப்படுத்தியுள்ளது.
