அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, பாதுகாப்புப் படையினர் டொனால்ட் டிரம்பை அவசரமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட குழப்பமான சூழலில் டிரம்ப் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், இந்த இக்கட்டான தருணத்தையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, டிரம்பின் தடுமாற்றத்தை மையமாக வைத்து விதவிதமான மீம்கள் மற்றும் கிண்டல் பதிவுகள் சமூக வலைதளங்களில் குவியத் தொடங்கின.
இதனால் ஒரு தரப்பினர் இது ஒரு தீவிரமான பாதுகாப்பு குறைபாடு என்று கவலை தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் டிரம்பின் செய்கைகளையும் அவர் விழுந்த விதத்தையும் நகைச்சுவையாகச் சித்தரித்து வருகின்றனர். தற்போது இணையம் முழுவதும் இந்த ‘எவாக்குவேஷன்’ வீடியோவும், அதனைச் சார்ந்த மீம்களுமே பேசுபொருளாக மாறியுள்ளன.
