ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். தற்போது வரை ப்ரீ புக்கிங்கில் பல கோடிகளை அள்ளியிருக்கும் துணிவு கண்டிப்பாக முதல் நாள் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. வரும் 11ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரீ புக்கிங் சென்ற சனிக்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் துணிவு படத்தின் பிரிமியர் காட்சி நேற்று திரையிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை அஜித் மனைவி ஷாலினி, தயாரிப்பாளரான போனிகபூர், உதயநிதி ஸ்டாலின்  ஆகியோர் பார்த்துள்ளனர். அதன்பின் படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படத்துடன் சேர்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடிக்கும் எமோஜியை பதிவுசெய்துள்ளார். இதன் வாயிலாக படம் சிறப்பாக வந்துள்ளது என தெரிகிறது. அத்துடன் படம் பார்த்த நட்சத்திரங்களும் படம் அருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்களாம்.