தமிழகத்தில் இருதய நோய் போன்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அழைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் தீவிர நோயாளி பாதிக்கப்பட்ட பணி செய்ய முடியாத சூழல் ஏற்படக்கூடும். அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட நிலையில் நல வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதிற்கு உட்பட்டவர்கள் அரசின் நலத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

அதாவது இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட பணி செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கு உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக வருடத்திற்கு 60 லட்சம் வீதம் என்று மூன்று ஆண்டுகளுக்கு 1.80 கோடி தொடர் செலவு ஏற்படும் எனவும் இந்த திட்டத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் 1500 பேர் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.