கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர்கள் கடன் பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்துள்ளனர். அதாவது பலரிடமும் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்துள்ளனர்.
அதனால் நேற்று 3 பேரும் கால்வாய்க்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மீட்பு பணியினர் உதவியோடு தாய் மற்றும் தந்தையின் உடலை மீட்டெடுத்தனர். சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
