அமெரிக்க நாட்டில் யலன்சியா ரொசாரியோ (31) என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இந்த ஆசையின் காரணமாக அவர் 9 ஆண் மகன்களை பெற்றெடுத்துள்ளார். அதாவது ஒவ்வொரு முறையும் கர்ப்பமாகும் போது தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டார். இருப்பினும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இருந்தாலும் தன்னுடைய பெண் குழந்தை ஆசைக்காக அவர் 9 முறை கர்ப்பமான நிலையில் 9 ஆண் குழந்தைகள் பிறந்தது.
இதைத்தொடர்ந்து அவர் 10-து முறை கர்ப்பமான நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதில் அவருடைய விருப்பப்படி பெண் குழந்தையும் பிறந்தது. இருப்பினும் அவரின் ஆசை தீரவில்லை. தன்னுடைய மகளுக்கு சகோதரி வேண்டும் என்பதற்காக மீண்டும் 11 வது முறை கர்ப்பமாகியுள்ளார். அதோடு தன்னுடைய மகன்கள் வருங்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதையும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த செய்தியை அவர் instagram-ல் வீடியோ வழியாக வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
