
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவருடைய தந்தை தெய்வசிகாமணி மற்றும் தாய் அலமாத்தாள். இதில் தெய்வசிகாமணி தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவரை மறுமண அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனை தடுக்க சென்றால் அவருடைய மனைவி மற்றும் மகனையும் அவர்கள் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் அவர்களை கொலை செய்த பிறகு வீடு புகுந்து நகை மற்றும் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. தீரன் பட பாணியில் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் குடும்பத்தினரை கொலை செய்து இந்த கொள்ளையை அரங்கேறி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மூவரின் சடலங்களையும் ஈட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சினிமா பாணியில் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.