உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் குழு ஒன்று மழை பெய்த போது விளையாடிக்கொண்டிருந்தனர். சில மாணவர்கள் சட்டை அணியாமல் கொட்டும் மழையிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் திடீரென ஒரு மரத்தின் அருகே இருந்து பயங்கரமாக மின்னல் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் இதில் காயம் எதுவும் ஏற்படவில்லை.
நூலிலையில் அனைத்து மாணவர்களும் உயர்த்த பிழையில் மின்னல் தாக்கியதும் மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பீதியில் தலை தெறிக்க ஓடுவதை வீடியோவில் காண முடிகிறது. இந்த மின்னல் தாக்கிய பிறகு அந்த இடத்தில் கடுமையான புகை நாற்றம் வீசியதாக உள்ளூர் மக்கள் கூறினார்கள். அந்த மரத்திற்கு அருகே சில அடிகள் இருந்திருந்தால் விளைவுகள் மோசமாக இருந்திருக்கும். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் மழை பெய்யும் நேரத்தில் இதுபோன்று வெளியே வந்து விளையாடக்கூடாது என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
➡️ बस्ती
➡️ किसान डिग्री कॉलेज में गिरी आकाशीय बिजली
➡️ बारिश में खेल रहे बच्चे बाल-बाल बचे
➡️ घटना का लाइव वीडियो कैमरे में कैद
➡️ कोतवाली थाना क्षेत्र का मामला#Basti #LightningStrike #StudentSafety #BreakingNews #LiveVideo pic.twitter.com/IcBKXG2lcy— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 31, 2025
