சமூக வலைதளங்களில் தாயின் கரிசனம் மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ தற்போது பலரை கண் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு தாயார் தனது குழந்தைகளை சைக்கிளில் ஏற்றி, கடும் வெயிலில் பள்ளிக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
சைக்கிள் ஓட்டும் அந்த தாயின் முகத்தில் தெளிவாகக் காணப்படும் அன்பும், மன உறுதியும், தியாகமும் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. “தாயை விட பெரிய தெய்வம் இல்லை” என்பதற்கான உயிர்ப்புமிக்க உதாரணமாக இந்த வீடியோ திகழ்கிறது.
View this post on Instagram
A post shared by हमारा सिवनी ❤️📸 (@seoni_01)
“>
இந்த வீடியோவில், ஒரு தாயார் தனது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக சைக்கிளில் கடுமையான வெயிலில் போராடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. வீடியோவை பார்ப்பவர்களின் மனதில் உறைந்த கருத்து என்னவெனில், இந்த தாய் தனது பிள்ளைகளுக்கு உயர்ந்த எதிர்காலத்தை வழங்கும் முனைப்போடு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதே. வீடியோவில் காணப்படும் ஒவ்வொரு காட்சியும் தாயின் தியாகத்தையும், அவரது நிலைத்த மனப்பாங்கையும் பிரதிபலிக்கின்றது.
இந்த வீடியோவை இதுவரை அதை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, பலரும் உணர்ச்சி மிக்க கருத்துகளை பதிவு செய்துள்ளனர். “தாயை போல் யாரும் இல்லை”, “இந்த தாயாருக்கு எனது வணக்கம்”, “இப்போதுதான் புரிகிறது தாயை ஏன் கடவுள் போலப் பார்க்கிறார்கள் என்று” என்ற வாசகங்களோடு பலர் மனம் உருகும் வகையில் இந்த வீடியோவிற்கு கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.
