ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை என்பது உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை மற்றும் பட்டாசுகளை தாண்டி அனைவரது நினைவுக்கு வருவது போனஸ் தான். தீபாவளிக்கு ஒரு வரலாறு உள்ளது போல தீபாவளி போனஸ் வந்ததற்கும் ஒரு வரலாறு உள்ளது.

அதாவது ஒரு மாத சம்பளத்தை போனஸ் ஆக வழங்க கோரி 1930 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின. பத்து ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கியது. அன்று முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தீபாவளி போனசை வழங்கி வருகின்றன.