தீபாவளி என்றாலே புது புது படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து பார்ப்போம். முதலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜிகர்தண்டா படம் வெளியானது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தலைப்பில் வெளியாகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து விக்ரம் மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்த ரைடு படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ரைடு படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹாலிவுட் மார்வெல் தயாரிப்பில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு உலக அளவில் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களது தயாரிப்பில் இருந்து தி மார்வெல்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. டைகர் பார்ட் 1 பார்ட் 2 படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தீபாவளி அன்று டைகர் பார்ட் 3 படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.