இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 283 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவை 4480 ட்ரிப்புகள் பயணிக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்க பெரிது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 283 ரயில்களை மண்டல வாரியாக பிரித்துப் பார்த்தால் தென் மத்திய ரயில்வேக்கு 58 சிறப்பு ரயில்கள் கிடைத்துள்ளது. இவை 404 ட்ரிப்புகள் பயணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.