இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ராபி கால பயிர்களுக்கான உரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நைட்ரேட் கிலோவுக்கு 47.2 ரூபாயும், பாஸ்பேட் கிலோவுக்கு 20.82 ரூபாயும், பொட்டாஷ் கிலோவுக்கு 2.38 ரூபாயும் மானியமாக வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே சர்வதேச சந்தையில் உரவிலை உயர்ந்து இருந்தாலும் இந்தியாவில் DAP உரம் ரூ.1,350 க்கு, NPK உரம் ரூ.1,470 க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.