உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காமால்பூர் கிராமத்தை சேர்ந்த தீபக் என்பவரது ஐந்து வயது மகன் குணாலுக்கு விளையாடும் போது கட்டைவிரல் துண்டாகியுள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த உறவினர்கள் சிறுவனை அழைத்துக் கொண்டு மீரட் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சிறுவன் மருத்துவமனையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது மருத்துவர்கள் யாரும் சிகிச்சை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் குணாலை அழைத்து வந்த உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு கட்டத்தில் தகராறாக மாறி மருத்துவர்கள் அனைவரும் சேர்ந்து சிறுவனின் உறவினர்களை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 3 மருத்துவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஆர் சி குப்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.