சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 6 அடி 4 அங்குல உயரமுள்ள ஒரு பெண், பயங்கரமான வேடமணிந்து ஒரு திருவிழா கூட்டத்திற்குள் வலம் வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளார். ரித்ரிஷா அதிகாரி என்ற இந்த சமூக வலைதள பிரபலம், சிவப்பு நிற உடை அணிந்து, கையில் ஒரு லாந்தர் விளக்குடன், முகம் முழுவதும் பயமுறுத்தும் ஒப்பனை மற்றும் போலி ரத்தக் கறைகளுடன் வலம் வந்தார்.
இந்நிலையில் அவரது அசாதாரண உயரமும், திகிலூட்டும் முகபாவனைகளும் அங்கு வந்திருந்த குழந்தைகளையும் பொதுமக்களையும் ஒரு நிமிடம் உறைய வைத்தன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட குறுகிய காலத்திலேயே பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது.
View this post on Instagram
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இரவு நேரத்தில் இவரைத் தனியாகப் பார்த்தால் மயக்கமே வந்துவிடும்” என்றும், “இவரது உயரத்திற்கும் நடிப்புத்திறனுக்கும் ஹாலிவுட் படங்களில் முயற்சி செய்யலாம்” என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிறுமி இவரைப் பார்த்து பயந்து அழும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது, இது பார்வையாளர்களை ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
