தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தார். இது அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் திமுகவை தொடர்ந்து அவர் விமர்சித்து வருகிறார். அதன்பிறகு சமீபத்தில் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது திருமாவளவன் விழாவில் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணிகளின் அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறிய நிலையில் அதனை திருமாவளவன் மறுத்தார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சி ஒழிக்கப்பட்டு, கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் கூறிய நிலையில் அவர் கட்சி நடனுக்கு எதிராக செயல்பட்டதாக ஒரே திருமாவளவன் அவரை ஆறு மாத காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின் போது சமூக ஊடகவியலாளர் ஒருவர் திருமாவளவனின் கருத்தைதான் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளதாகவும், பலரின் மனக்குமுறல்களை தான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டின் போது விஜய் சொன்னதாகவும் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அவர் கூறியதாகவும் கூறினார்.

அதன்பிறகு திருமாவளவனை திமுக அசிங்கப்படுத்தியதாக கூறினார். அதாவது அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது ஆதவ் அர்ஜுனா சொன்னது பலரின் மனதில் உள்ளது என்றும் அது திருமாவளவனின் கருத்து தான் என்றும் கூறினார். அதே சமயத்தில் திமுக கட்சியின் அமைச்சர் ஒருவர் நீங்கள் இத்தனை நாட்களாக ஜர்ஜாக இருந்ததே நாங்கள் போட்ட பிச்சை தான் என்று கூறினார். ஆனால் அந்த சமயத்தில் அவர் பேசியது திருமாவளவனின் மனதை சங்கடப்படுத்தும் என்று கூறி அவரை கட்சியிலிருந்து ஆறு மாத காலம் ‌ இடைநீக்கம் செய்யவில்லை.

இந்த கூட்டணி தர்மம் திருமாவளவனின் மனது கஷ்டப்படும் என்று கூறி அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யாத நிலையில், ஜாதி சங்க கூட்டங்களில் பல மூத்த அமைச்சர்களே சென்று கலந்து கொண்ட நிலையில் அது திருமாவளவனின் மனதை சங்கடப்படுத்தும் என்று கூறி அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யவில்லை. ஆதவ் அர்ஜுனா தன் அறிக்கையில் கூட மன்னராட்சி என்று ஆட்சியை குறிப்பிடவில்லை எனவும் மனநிலையை மட்டும் தான் குறிப்பிடுவதாகவும் தெளிவாக கூறியுள்ளார். மேலும் இதற்கான விதை தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் போட்டது இதைப்பற்றி இதுவரை எவரும் பேசாத நிலையில் தற்போது அதவ் பேசுகிறார் என்று கூறினார்.