
தமிழ்நாட்டின் முதல்வராக திருமாவளவன் ஆட்சியில் அமர்வார் என்று கூறியதற்கு மத்திய மந்திரி எல். முருகன் அது ஒருபோதும் நடக்காது என்று விமர்சித்தார். இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் முதல்வராக கண்டிப்பாக திருமாவளவனை நாங்கள் ஆட்சியில் அமர வைப்போம்.
திருமாவளவனின் முதல்வராகும் கனவு பலிக்காது என்று சொல்வதற்கு எல். முருகன் யார்.? திருமாவளவன் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றால் என்னை விட பெருமையும் மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது. மேலும் எல்.முருகன் மத்திய அமைச்சராக இருக்கும்போது திருமாவளவனால் மட்டும் ஏன் முதல்வராக முடியாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.