
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில் பரினிதா ஜெயின் என்ற பெண் வசித்து வருந்துள்ளார். இவர் தன்னுடைய உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள ரிசார்ட் சென்றார். அப்போது அந்த பெண் அங்கு மேடையில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்த நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் சிபிஆர் செய்ய முயன்றனர்.
இருப்பினும் இளம்பெண்ணுக்கு சுயநினைவு வராத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஏற்கனவே அந்த பெண் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்ட நிலையில் மாரடைப்பால் உயரிழந்ததாக தெரிவித்தனர். முன்னதாக இளம் பெண்ணின் தம்பிகளில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் இறந்துள்ளார். மேலும் சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Madhya Pradesh – A young woman collapsed while dancing on stage at her sister’s wedding in Vidisha. Relatives who were there rushed her to the hospital, but doctors declared her dead.
How normal this has become post c0vid jabs yet no one questions!@shreyastalpade1 @MoHFW_INDIA https://t.co/dxJBVwT9ey pic.twitter.com/JwoWTUvz7B— Dee (@DeeEternalOpt) February 9, 2025