திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நார்த்தம்பூண்டி ஊரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டாள் நாச்சியார், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. இந்தத் திருத்தலத்திற்கு திருமணம் கை கூடாதவர்கள் வந்து செல்வதால் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு மட்டை தேங்காய் வைத்து வணங்குகின்றனர்.

கோவில் குளத்தில் நீராடி விட்டு ஈரத் துணியுடனே 27 முறை கோவிலை வலம் வந்து மட்டை தேங்காய் வைத்து கல்யாண வெங்கடேஸ்வரரை வழிபடுவதன் மூலம் பல வருடங்களாக நடைபெறாத திருமணம் அடுத்த மாதமே அமைவதற்கான வாய்ப்பு உண்டாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. நினைத்தது போல் வேண்டுதல் நிறைவேறி திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதமாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவது வழக்கம்.