1.ஸ்ரீ துர்க்கை அம்மனை பூஜிப்பதன் மூலம் சொர்க்க சுகத்தை அடைந்து மோட்சத்தை அடைய முடியும்.

2.ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மிகவும் விருப்பமான புஷ்பம் என்றால் அது நீலோத்பலம். இது அனைத்து விதமான புஷ்பங்களை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது.

3.துர்க்கை எனும் சொல்லில் த், உ, ர், க், ஆ என்ற ஐந்து அட்சரங்கள் இருக்கிறது. இதில்

த் என்றால் அசுரர்களை சம்ஹாரம் செய்பவள்.

ப் என்றால் இடையூறு அகற்றுபவள்.

ர் என்றால் ரோகத்தை துரத்துபவள்.

க் என்றால் பாவத்தை போக்குபவள்.

ஆ என்றால் சத்ரு பயம் போன்றவற்றை அடியோடு அழிப்பவள்.

4.வழக்குகளில் வெற்றி பெற சிறை தண்டனையிலிருந்து விடுதலை பெற துர்க்கை தேவியை சரணடைய வேண்டும்.

5.நல்லெண்ணையில் தீபம் ஏற்றி சண்டிகாதேவி சகஸ்ரநாமம் கொண்டு அர்ச்சனை செய்வதுதான் உகந்தது.

6.அஷ்டமி தினத்தன்று ரோஜா, செம்பருத்தி, அரளி, செந்தாமரை போன்ற சிவப்பு நிறம் புஷ்பங்களால் அர்ச்சனை செய்வது பலன் கொடுக்கும்.

7.ஒரு வருடம் தொடர்ந்து ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டால் முக்தி உங்கள் வசம் ஆகும்.