
காரைக்காலில் மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி 2.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகனுக்கு திருமணம் ஆகாததால் திருமண தோஷத்தை கழிப்பதற்காக விருதுநகரை சேர்ந்த கிளி ஜோதிடர் முனுசாமி என்பவர் சுகந்தி, வினோத் ராஜ் உள்ளிட்ட இருவரையும் சகுந்தலாவிற்கு அறிமுகம் செய்துள்ளார்.
பின்னர் சுகந்தி, வினோத் ராஜ் இருவரும் சகுந்தலாவின் மகனது திருமண தோஷம் நீக்கி பரிகாரம் மற்றும் சிறப்பு பூஜை செய்ய தவண முறையில் 2.18 லட்சம் ரூபாயை பெற்று ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சகுந்தலா அளித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து கிளி ஜோதிடர் முனுசாமி, சுகந்தி, வினோத் ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.