தமிழ் சினிமாவில் “கேடி” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் இலியானா. பாலிவுட்டில் பிரபலமாக இருந்தாலும் இவருடைய திரை பயணம் தமிழ் சினிமாவில் இருந்து தான் ஆரம்பித்தது. கேடி படத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இரண்டு படங்களில் நடித்துவிட்டு கடைசியாக அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான பிட் புல் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு இலியானாவிற்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லை.
இந்த நிலையில் சினிமாவை விட்டு சென்றாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய முதல் கர்ப்பத்தை அறிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் ஷாக் ஆனாலும் தந்தையையும் அறிவித்தார்.
இந்த சூழலில் தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் இரண்டாவது குழந்தையா? என்று கருத்துக்களை பகிர்ந்து நலம் விசாரித்து வருகிறார்கள். இதற்கு இலியானா தரப்பில் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
