நடிகை தமன்னா பல படங்களிலும் நடித்து பிஸியான ஒரு நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தையே கலக்கி வருகிறது. நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவது தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் இருவரும் விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ளனர். இதனை அடுத்து இருவருக்கும் எப்போது திருமணம் என்று தமன்னா தெளிவுபடுத்தியுள்ளார். “சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ள விரும்பினேன்.

ஆனால், இப்போது சினிமாவில் பிஸியாகிவிட்டேன். திருமணம் பற்றிய செய்தியை அறிய இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்” என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். மாலத்தீவில் தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.