
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கச்வானியா என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் திருமணம் முடித்து இரண்டே நாளில் மே 22ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணமான இரண்டு நாளில் பெண்ணிற்கு குழந்தை பிறந்ததை கண்டு அவருடைய மாமியார் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விசாரித்ததில், கடந்த ஆண்டு அந்தப் பெண் தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது சுனில் பாகேல் என்பவர் பலாத்காரம் செய்தது. இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.