
காமாக்சி ரஹேஜா என்பவர் திருமணம் மற்றும் மனநல ஆலோசகர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில், இது ஒரு பெண்ணின் உண்மை கதை. அந்த பெண்ணுக்கு உதவுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல் இருக்கும் ஒரு நபரோடு காதலில் விழுந்துவிட்டேன்.
அந்த நபர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நானும் விவகாரத்தை பெற்றவர் தான். ஆனால் அவர்களுடைய விவகாரத்துக்கு நான் தான் காரணம் என்பதை நான் நினைத்து வருந்துகிறேன். என்னால் தெளிவான ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? என்று குறிப்பிட்டுள்ளார்.