ஹரியானா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 45 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான அனைத்து விவரங்களையும் ஹரியானா மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் 2750 ஓய்வூதியம் பெறுவதற்கு அதிகாரப்பூர்வமாக தனியாக வசிக்க வேண்டும். விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் லிவ் இந்த பார்ட்னர்களுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் 1.89 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் திட்டத்தின் பயன்பெறுபவர்கள் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் இயக்குனரகத்தில் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு அபராத மிதிக்கப்படும் என்றும் 12 சதவீத வட்டி உடன் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.