பெண்களின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு எல்ஐசி கன்யாடன் என்ற பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் காலம் 25 ஆண்டுகள் ஆகும். காப்பீட்டுக்கான குறைந்தபட்ச காலம் 13 ஆண்டுகள். மேலும் குழந்தையின் தந்தையின் வயது 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மகளுக்காக பாலிசி எடுத்தவர்கள் மாதம்தோறும் 3600 செலுத்த வேண்டும். 25 ஆண்டுகள் முடிந்த பிறகு 26 லட்சம் ரூபாய் பெறலாம். ஒருவேளை தந்த இறந்து விட்டால் அதன் பின்னர் பிரீமியம் செலுத்த வேண்டாம். குடும்பத்தின் நலம் கருதி எல்ஐசி மீதமுள்ள பிரீமியங்களை செலுத்தும்.