தமி சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை அமலா பால் தனது நண்பர் ஜகத் தேசாயை கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் இவரைப்பற்றிய ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. அதாவது தனது நண்பருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த அமலா பால் கர்ப்பமானதாகவும், அதன் காரணமாகவே இருவரும் உடனே திருமணம் செய்துகொண்டதாகவும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.