
பஞ்சாப் மாநில மோகா மாவட்டத்தில் மணமகன் ஒருவர் திருமண மண்டபத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் உறவினர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் காரை ஓட்டிக் கொண்டிருந்த பிரதாப் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த ட்ரக்கை கவனிக்காமல் அதன் மீது மோதி விட்டார். இந்த விபத்தில் மணமகன் மற்றும் குடும்பத்தார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் ஓட்டுநர் பிரதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த மணமகன் மற்றும் குடும்பத்தார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.