திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது..

திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த ஆலையில் பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.. இந்நிலையில் இன்று காலை ஆலையில் உள்ள பாய்லர் வெடித்து கரும்புகை வெளியேறியது. இதில் அருகில் இருந்த தொழிலாளர்கள் பாய்லரின் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது.. இதையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களைக் கொண்டு தீயை அணைப்பதற்காக போராடி கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்துள்ளனர். இப்பகுதியில் மின்சார தடை செய்யப்பட்டுள்ளதால் பெரியளவு சேதம் என்பது தவிர்க்கப்பட்டுள்ளது. தீபத்திற்கான காரணங்கள் குறித்து மங்களம்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. திருப்பூர் அருகே ஆண்டிபாளையத்தில் பிரபல நிறுவனத்தில் திடீரென தீபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் ஒரு பதட்டமான சூழல் நிலவியது..