திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு இடையே, பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகீர் விபத்து அரங்கேறியுள்ளது.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றில் கிழிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது திடீரென விழுந்தது.
இதில் நிலைதடுமாறி அந்த நபர் நடுரோட்டில் விழுந்த நிலையில், பின்னால் பெரிய வாகனங்கள் ஏதும் வராததாலும், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது. சாலையோரங்களில் பேனர் வைக்கக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கொந்தளித்து வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
